செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Updated : புதன், 16 ஆகஸ்ட் 2017 (15:54 IST)

விஜய்யின் படத்துக்கு விளம்பரம் செய்யும் நடிகை

விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்துக்கு, புதுவிதமான விளம்பர யுக்தியை அறிமுகப்படுத்தியுள்ளார் நடிகை விஷாகா சிங்.


 
‘பிடிச்சிருக்கு’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் மூலம் பிரபலமானவர் விஷாகா சிங். மும்பையைச் சேர்ந்த இவர், கன்னடம், ஹிந்திப் படங்கள் மட்டுமின்றி, ஒரு ஆங்கிலப் படத்திலும் நடித்துள்ளார். நடிப்பதோடு மட்டுமின்றி பிசினஸும் செய்துவரும் விஷாகா சிங், தன்னுடைய நிறுவனத்தின் மூலம் புது டெக்னாலஜி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்.

இந்த டெக்னாலஜி, விஜய் நடித்துவரும் ‘மெர்சல்’ படத்துக்குத்தான் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. அதாவது, படத்தைத் தயாரித்து வரும் தேனாண்டாள் ஸ்டுடியோ நிறுவனம், விஜய் ரசிகர்கள் ஒவ்வொருக்கும் ‘மெர்சல்’ படத்தின் போஸ்டரை பிரத்யேகமாக அனுப்பி வைக்கும். ஃபேஸ்புக்கில், கொடுக்கப்பட்டிருக்கும் லிங்க் மூலம் தேனாண்டாள் நிறுவனத்தின் மெசெஞ்சருக்கு சென்றால், அதிலிருந்து ‘மெர்சல்’ போஸ்டர் உங்களுக்கு வந்துசேரும்.