லஸ்ட் ஸ்டோரிஸ் வெப் தொடரில் நடிக்க தமன்னாவுக்கு இத்தனைக் கோடி ரூபாய் சம்பளமா?
தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானார் தமன்னா. ஆனால் அவருக்கான கவனிப்பு என்பது கல்லூரி மற்றும் அயன் ஆகிய படங்களின் மூலம்தான் கிடைத்தது. அதையடுத்து வரிசையாக முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து டாப் நடிகையானார். இப்போது ரஜினிகாந்தோடு ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் தமன்னா படுக்கையறைக் காட்சிகளில் நான் நடிக்கமாட்டேன் என்று கூறியிருந்தார். ஆனால் இப்போது அவரே அந்த விதியை மீறியுள்ளார். இதுபற்றி விளக்கமளித்துள்ள அவர் “நான் முன்பு படுக்கையறை காட்சிகளில் நடிக்கக் கூடாது என்ற விதியை போட்டுக்கொண்டேன். ஆனால் இப்போது நானே அதை மீறியுள்ளேன். அடுத்த கட்டத்துக்கு செல்வதற்காக இந்த முடிவை நான் எடுத்தேன். ஏன் படுக்கையறைக் காட்சிகளில் நடிக்கக் கூடாது என்ற கேள்வியை கேட்டுக் கொண்டேன். கிண்டல் செய்பவர்கள் பற்றி எனக்குக் கவலை இல்லை” எனக் கூறியுள்ளார்.
ஆனால் உண்மையான காரணம் இதுவில்லையாம். சமீபத்தில் வெளியான லஸ்ட் ஸ்டோரிஸ் வெப் தொடரில் நடிக்க அவருக்கு 7 கோடி ரூபாய் அளவுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும், அதனால் படுக்கையறை காட்சிகளில் நடிக்க அவர் ஒத்துக் கொண்டதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.