வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 7 ஜூலை 2023 (08:18 IST)

மறைந்த இயக்குனர் கே வி ஆனந்த் மகள் திருமணம்… பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்து!

அயன், கோ உள்ளிட்ட படங்களின் இயக்குனரும், முதல்வன், சிவாஜி உள்ளிட்ட ஏராளமான படங்களின் ஒளிப்பதிவாளருமான கே வி ஆனந்த் கடந்த ஆண்டு மே மாதம்  மாரடைப்பால் காலமானார். அவரது திடீர் மறைவு திரையுலகினர் மத்தியிலும் அவரது ரசிகர்கள் மத்தியிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இப்போது கே வி ஆனந்தின் மகள் சாதனா ஸ்ரீக்கு விஷ்ணு ராஜ் என்பவருக்கும் திருமணம் நேற்று எழும்பூரில் உள்ள ராஜா அண்ணாமலை மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த திருமணத்தில் இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.