வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Updated : வியாழன், 7 நவம்பர் 2024 (15:29 IST)

ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தி.. இரக்கமே இல்லாம நடந்துக்குவார்! - மனம் திறந்த சல்மான்கான் முன்னாள் காதலி!

Salman Khan

நடிகர் சல்மான்கானின் முன்னாள் காதலியான சோமி அலி, நீண்ட நாட்கள் கழித்து சல்மான்கான் குறித்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

பாலிவுட் திரையுலகில் உச்ச ஸ்டாராக இருப்பவர் சல்மான்கான். படங்களால் எவ்வளவு பிரபலமோ அதே அளவு சர்ச்சைகளாலும் தொடர்ந்து பிரபலமாக இருப்பவர் சல்மான்கான். மானை சுட்டுக் கொன்ற விவகாரம், ப்ளாட்பாரத்தில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றியது, ரசிகரின் செல்போனை உடைத்தது என்ற வன்முறை சம்பவங்கள் மட்டுமல்லாமல், ஐஸ்வர்யா ராய், கத்ரீனா கைப் உள்ளிட்டோருடனான காதல் விவகாரங்கள் என பாலிவுட்டை பரபரப்பிலேயே வைத்திருப்பவர்.

 

இதுவரை திருமணம் செய்து கொள்ளாத சல்மான்கானின் வாழ்க்கையில் நிறைய காதலிகள் வந்து சென்றிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் சோமி அலி. இவர் 1991 முதல் 1999 வரை சல்மான்கானுடன் உறவில் இருந்தார். ஆனால் அவரது செயல்பாடுகள் பிடிக்காததால் அவரை விட்டு விலகினார்.
 

 

சமீபத்தில் ரசிகர்களுடன் சமூக வலைதளத்தில் நடந்த கேள்வி-பதிலின்போது சல்மான்கான் குறித்து சோமி அலி பேசியுள்ளார். அதில் அவர் “சல்மான்கான் ஒரு மூர்க்கமான நபர். ஆனால் அதை அவருடன் காதலில் இருப்பவர்கள் தெரிந்து கொள்ள 7 ஆண்டுகள் ஆகிவிடும். சல்மான்கானுடன் காதலில் விழும் பெண்கள் 7 ஆண்டுகளுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் போவது இதனால்தான். அப்போதுதான் அவரது உண்மை முகம் தெரியும்.

 

எப்போதுமே சல்மான்கான் யாரையுமே ப்ரேக்-அப் செய்ய மாட்டார். அவர் கொடுமை தாங்காமல் பெண்களே வெளியேறிவிடுவார்கள். நான் அவருடன் காதலில் இருந்தபோது அவருக்கு 8 முறை ஒன் நைட் ஸ்டாண்ட் என்னும் இரவு உறவில் இருந்தார். என்னால் நீண்ட காலத்திற்கு அவரது உடல்ரீதியான, மனரீதியான கொடுமைகளை தாங்கிக் கொள்ள முடியவில்லை. சல்மான்கானை விட லாரன்ஸ் பிஷ்னோய் சிறந்தவராக இருப்பார்” எனக் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K