செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 21 ஜூன் 2021 (08:46 IST)

ஒல்லியான தோற்றத்துக்கு மாறிய பிரியா பவானி சங்கர்!

நடிகை பிரியா பவானி சங்கர் தனது உடல் எடையை குறைத்து ஒல்லியான தோற்றத்துக்கு மாறியுள்ளார்.

தமிழ் ரசிகர்களுக்கு செய்தி வாசிப்பவராக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை தொடரில் நடித்து பிரபலமானார் பிரியா பவானி சங்கர். ஒரு காலத்தில் சின்னத்திரை நடிகைகள் சினிமாவுக்குள் நுழைவது கடினமாக இருந்த நிலையில் அதை பொய்யாக்கும் விதமாக சினிமாவிலும் நுழைந்து வெற்றிகரமான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது குருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் வரிசையாக சமுகவலைதளங்களில் தனது புகைப்படங்களை பதிவேற்றி வரவேற்பைப் பெற்றுவரும் அவர், இப்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கொழு கொழு உடலுடன் இவ்வளவு நாளும் காணப்பட்ட அவர் இப்போது உடல் எடையைக் குறைத்து ஸ்லிம் லுக்குக்கு மாறியுள்ளார். ஒல்லியான உடலுடன் புடவையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.