1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 20 ஜூன் 2021 (20:28 IST)

நீண்ட நாட்களுக்கு பின் 1000க்கும் குறைவான கொரோனா பாதிப்பு: கோவை மக்கள் நிம்மதி!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக சென்னையில் மாநிலத்திலேயே அதிகமாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் சென்னை மாநகராட்சி எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக சென்னையில் மிக வேகமாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது. இன்று சென்னையில் 455 பேர்கள் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சென்னையை விட மிக அதிகமாக கோவை ஈரோடு சேலம் திருப்பூர் ஆகிய நகரங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து வந்தது. குறிப்பாக கோவையில் மிக அதிகமான கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் தற்போது கோவையிலும் படிப்படியாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது 
 
இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பின்னர் தற்போது கோவையில் ஆயிரத்துக்கும் குறைவான கொரோனா பாதிப்பு இன்று பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கோவை உள்பட 5 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா  பாதிப்பு குறித்த விபரங்களை தற்போது பார்ப்போம்:
 
 
• கோவை - 904
 
• ஈரோடு - 870
 
• சேலம் - 517
 
• திருப்பூர் - 477
 
• சென்னை - 455