இந்தியத் திரையுலகில் தனக்கெனத் தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டிருந்தவர் நடிகை குஷ்பு. இவர் 80 –களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 1989 ஆம் ஆண்டு வருஷம்-16 என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார்.
90 களின் முன்னணி நடிகையாக அனைத்து முன்னணி நடிகர்கள் சூப்பர் ஸ்டார்களின் படங்களில் வெற்றி நாயகியாக வலம்வந்தார் அவர். அவரது நடிப்பு,எந்தக் கதாப்பாத்திரத்திற்கும் ஏற்ப அவரது முகம் பாவம்,நடனம், குழந்தைகள் முதல் பெரியோர் வரை பல தரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்தது. அதனால் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் எல்லா நட்சத்திரங்களும் ஆதரவு அளிக்கும் தமிழர்கள் குஷ்புவுக்கு ஒருபடிமேல் போய் கோவிலே கட்டினார்கள். இது வேறு எந்த நடிகைக்கும் இலலாத சிறப்பு ஆகும்.
இந்நிலையில் , கமர்ஷியல் இயக்குநரகா வலம் வந்த சுந்தர்-சியை அவர் திருமணம் புரிந்துகொண்டார்.
திரையுலகில் பல சிம்ரன், ஜோதிகா,செளந்தர்யா உள்ளிட்ட புதுமுக நடிகைளின் வருகையால் நடிகை குஷ்பு ஜெயா டிவின் ஒளிப்பரப்பான ஜாக்பாட் நிகழ்ச்சியில் தொகுப்பாளியாகவும் மற்றும் சின்னத்திரை நாடகங்களிலலும் நடித்து அதிலும் வெற்றிக்கொடி நாட்டினார். அத்துடன் சினிமாத் தயாரிப்புகளில்(’’ அவ்னி சினிமாக்ஸ்” )ஈடுபட்டு , சினிமாவில் தற்போது ரஜினியின் அண்ணாத்த வரை குணச்சித்திர நடிகையாகவும் இருக்கிறார்.
சினிமாவிலும் சாதித்து சின்னத்திரையிலும் கால்பதித்து இன்றும் வெற்றியாளராக வலம் வருபவர்களில் அரசியல் களத்திலும் குதித்து அதில் வெற்றி பெற்றவராகவே குஷ்பு அறியப்படுகிறார். இப்போதும் அவருக்கென்று ரசிகர்கள் பட்டாளம் உண்டு.
சில வருடங்களுக்கு முன் அவர் தெரிவித்த கருத்து தமிழ் கலாச்சாரத்திற்கு எதிராக இருப்பதாக திமுகவினரால் வழக்குத் தொடுக்கப்பட்டது. பின்பு குஷ்பு தான் அரசியலில் ஈடுபடப்போவதாக கடந்த 2010 ஆம் ஆண்டு பகிரங்கமாக அறிவித்தார். அதனால் அவர் திமுக, அல்லது காங்கிரஸில் இணைவார் என்று பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்டது.
இதையடுத்து அவர் திமுகவில் இணைந்தார். இதனால் ஜெயா டிவி நிகழ்சியிலிருந்து தொகுப்பாளியாக இருந்த குஷ்பு வெளியேற்றப்பட்டார். அப்போது அவர் மீதான வழக்கை திமுக வாபஸ் பெற்றது. அந்த நேரத்தில் ஆரம்பிக்கப்பட்ட கலைஞர் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராகக் கலந்துகொண்டு, சில தொடர்களைத் தயாரித்து நடிக்கவும் செய்தார். பின்னர் 2011 ஆம், ஆண்டு சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2014 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் திமுகவுக்காக தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார.
பின்னர் திமுகவின் அடுத்த தலைவர் ஸ்டாலின் என்று நாமே முடிவு செய்யக்கூடாது என்று அவர் கூறிய கருத்து ஸ்டாலின் ஆதரவாளர்களிடையே பற்றி எரிய குஷ்புவை விமர்சித்தனர் .அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. லோக்சபா தேர்தலில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை இதுபோன்ற காரணங்களால் அவருக்கு திமுக மீது மனஸ்தாபம் ஏற்பட்டதாகத் தெரிகிறது
இதனையடுத்து, திமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்து குஷ்பு தேசிய கட்சியான பாஜகவில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியானது. அவர் அதற்கு ஏற்ற மாதிரி கல்வித் தகுதி குறித்த ஸ்மிருதி இராணி சர்ச்சையான விவகாரத்தில் குஷ்பு அவருக்கு ஆதவு தெரிவித்தார். ஆனால் யாரும் எதிர்ப்பாராத விதமாக கா
இந்நிலையில் அவருக்கு கடந்த வருடம் லோக்சபாவிலும் போட்டியிட வாய்ப்பு அழிக்கவில்லை அதனால் கட்சிமேலிடத்தின் மீது மனஸ்தாபத்தில் இருப்பதாகக் கூறப்பட்டது.
அதேசமய பாஜகவில் சில கருத்துகளுக்கு அவர் ஆதரவளித்தார். இது மாநில காங்கிரஸாருக்கு எரிச்சல் ஏற்படுத்தியது.
இந்நிலையில் குஷ்பு பாஜகவில் இணையப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகப் பேசப்பட்டது. அதை மறுத்த குஷ்பு, ’’ரூ.2 கொடுத்தால் எதைவேண்டுமானால் பேசுவார்கள் பாஜவினர்’’ என்று தெரிவித்த நிலையில், அவர் தற்போது டெல்லி செல்லவுள்ளதாகவும் நாளை பாஜக தேசியத் தலைவர் நட்டா தலைமையில் அக்கட்சியில் இணையவுள்ளதகத் தகவல்கள் வெளியாகிறது.
நாளைக் காலை விடிந்தால்தான் அரசியல் நிலவரம் எவ்வளவு பரபரப்புக் குள்ளாகிறது என்பது தெரியும்!
நடிகை குஷ்பு காங்கிரஸிலிருந்து விலகினால் அக்கட்சிக்கு ஒன்றும் நஷ்டமில்லை என்றாலும் ஒரு நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்து குறைவது பலவீனாமாகவே பார்க்கப்படும். அவரது ஆளுமையும் பேச்சுச் சாதுர்யமும் ஒரு இழப்பாகவே பார்க்கப்படும்.
குஷ்பு பாஜவின் இணைந்தால், அவருக்கு நிச்சயம் பதவி கொடுக்கப்படும் இத்தனை வருட அரசியலில் அவருக்கு அப்பதவி ஒரு அவசியமாகவும் இருக்கலாம் , அல்லது அடுத்த சட்டமன்ற தேர்தலில் குஷ்புவுக்கு தமிழக அரசியலை மையப்படுத்தி புதிய பதவியும் கொடுக்கப்படலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.