செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 10 அக்டோபர் 2020 (08:32 IST)

அதிமுக - பாஜக கூட்டணி முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமியா?

அதிமுக - பாஜக கூட்டணி முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமியா பதில் அளிக்க மறுத்த எல்.முருகன். 
 
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவில் எழுந்த முதல்வர் வேட்பாளர் சர்ச்சைகள் ஓய்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியே அடுத்த முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அதிமுகவினர் குழப்பமின்று தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர்.
 
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது முதல்வர் இல்லத்தில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். முன்னர் தமிழக பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தற்போது உள்ள கூட்டணி நாடாளுமன்ற தேர்தலுக்காக ஏற்படுத்தப்பட்ட கூட்டணி. 
 
சட்டமன்ற தேர்தலுக்காக கூட்டணி அமைக்கப்படும். அந்த கூட்டணியானது திமுகவுடனும் இருக்கலாம், அதிமுகவுடனும் இருக்கலாம் அல்லது இரண்டும் இல்லாமலும் கூட இருக்கலாம். சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணியில் மாற்றங்கள் ஏற்படும் என கூறினார். 
 
இதனிடையே இது குறித்து பாஜக தமிழக தலைவர் எல்.முருகனிடம் கேட்ட போது, இதற்கு அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.