1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 30 ஜனவரி 2022 (11:27 IST)

இந்தி நடிகை கஜோலுக்கு கொரோனா! – அதிர்ச்சியில் திரையுலகம்!

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் இந்தி நடிகை கஜோலுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்தி சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் கஜோல். ஷாரூக்கான், சல்மான் கான் உள்ளிட்ட பிரபல நடிகர்களோடு நடித்துள்ள இவர் தமிழில் மின்சார கனவு உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையேயும் பிரபலமானவர். நீண்ட ஆண்டுகள் கழித்து சமீபத்தில் விஐபி 2 படத்தின் மூலம் மீண்டும் தமிழில் நடித்திருந்தார்.

கஜோல் இந்தி நடிகரான அஜய் தேவ்கனை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் நடிகை கஜோலுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தனக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக இன்ஸ்டாகிராம் வாயிலாக தெரிவித்துள்ள கஜோல் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.