1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 4 மார்ச் 2019 (09:31 IST)

கேரவன் இல்லாததால் பப்ளிக் டாய்லெட்டில் உடை மாற்றிய நடிகை

பிரபல நடிகை ஷ்ருஷ்டி டாங்கே கேரவன் இல்லாததால் பப்ளிக் டாய்லெட்டில் உடை மாற்றியுள்ளார்.
 
பிரபல நடிகை ஷ்ருஷ்டி டாங்கே கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான காதலாகி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் யுத்தம் செய், மேகா, டார்லிங், வில் அம்பு, ஜித்தன்2, தர்மதுரை, சரவணன் இருக்க பயமேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் கதிர் நடிப்பில் உருவாகியுள்ள சத்ரு படத்தில் இவர் ஹீரோயினான நடித்துள்ளார். இப்படத்தில் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது பேசிய படத்தின் இயக்குனர் நவீன் நஞ்சுதன், படத்தின் மீதான ஷ்ருஷ்டி டாங்கேவின் ஒத்துழைப்பை சொல்லி மாளாது. ஒரு காட்சியின்போது ஹீரோயின் 20 காஸ்ட்யூம் மாத்தவேண்டியிருந்தது. கேரவன் இல்லாததால் பப்ளிக் டாய்லெட்டில் காஸ்ட்யூம் மாற்றி அந்த சீனை நடித்து கொடுத்தார் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.