நடிகர் ராகவா லாரன்ஸ் தம்பியின் மேல் துணை நடிகை புகார் !
நடிகர் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் மேல் தெலுங்கு துணை நடிகை ஒருவர் புகார் கூறியுள்ளது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் நடித்து புகழ் பெற்று வருகிறார். அவரது தம்பி எல்வினும் சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் மீது தெலுங்கு சினிமாவைச் சேர்ந்த நடிகை ஒருவர் புகார் கூறியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
அந்த பெண் அளித்த புகாரில் ‘திரைப்படங்களில் நடிக்கும் போது எனக்கு எல்வின் பழக்கமானார். ஆனால் அதன் பின்னர் தன்னைக் காதலிக்க சொல்லி எனக்கு தொல்லை தந்து வருகிறார். இது தொடர்பாக அவர் மீது நான் போலீசாரிடம் புகார் அளித்தும், தனது செல்வாக்கைப் பயன்படுத்தி என்னையே சிறைக்கு அனுப்பிவிட்டார்’ எனக் கூறியுள்ளார். தனக்குக் கொலை மிரட்டல் இருப்பதாகவும் அதனால் பாதுகாப்பு வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.