ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 16 டிசம்பர் 2017 (12:18 IST)

நடிகை பாவனாவின் திருமணம் எப்போது தெரியுமா?

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடிகை பாவனா பாலியல் தொல்லைக்கு ஆளான செய்தி திரையுலகில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. 
இந்நிலையில் பாவனா - நவீன் நிச்சயதார்த்தம் கொச்சியில் மார்ச் 9 ஆம் தேதி எளிமையாக நடைபெற்றது. அவருக்கு நடந்த அந்த கொடுமைக்கு காரணமான நடிகரும் கைது செய்யப்பட்டார்.
 
இந்த நிலையில் இருவருக்கும் வரும் டிசம்பர் 22ம் தேதி உறவினர்கள் மத்தியில் திருசூரில் திருமணம் நடக்க இருக்கிறதாம்.  திருமண விழா நிச்சயதார்த்தம் நடந்தது போல் மிகவும் சிம்பிளாக நடக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகை  பாவனா திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடிப்பேன் என கூறியுள்ளது குறிப்படத்தக்கது.