Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மீண்டும் சுசிலீக்ஸ் பரபரப்பு; பிரபல நடிகை போலீஸில் புகார்

Anuya
Abimukatheesh| Last Updated: செவ்வாய், 7 நவம்பர் 2017 (14:04 IST)
தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரிய அதிர்வை ஏற்படுத்திய சுசிலீக்ஸ் புகைப்படம் குறித்து நடிகை அனுயா சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

 

 
பாடகி சுசீத்ரா டுவிட்டர் பக்கத்தில் இருந்து தமிழ் சினிமா நடிகர் நடிகைகளின் புகைப்படம் வெளியாகி தமிழ் சினிமா துறை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. அதில் நடிகை அனுயாவின் புகைப்படமும் வெளியானது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் தற்போது நடிகை அனுயா இதுகுறித்து சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். தன்னுடைய புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. அதை யார் செய்தார்கள் என்று கண்டுபிடிக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார்.
 
சுசுலீக்ஸ் மூலம் வெளியான புகைப்படங்களும் நடிகைகள் அது நாங்கள் இல்லை என மறுப்பு தெரிவித்து இருந்தனர். சுசீத்ராவின் கணவர், சுசீத்ரா மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார் என்று கூறினார். ஆனால் சுசீத்ரா, தான் நன்றாக இருப்பதாகவும் தனது டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
 
இன்றுவரை சுசிலீக்ஸ் என்று வெளியிடப்பட்ட புகைப்படங்களை யார் வெளியிட்டது என்பது குறித்து மர்மமாகவே உள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :