கமல் பிரகாஷ்ராஜை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய அரவிந்த் சாமி

Arvind Swamy
Abimukatheesh| Last Updated: செவ்வாய், 7 நவம்பர் 2017 (13:57 IST)
அரசியல் நோக்கங்களுக்காக மக்களுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் தீவிரவாதம்தான் என நடிகர் அரவிந்த் சுவாமி தெரிவித்திருப்பது சர்ச்சையாகி உள்ளது.

 

 
வார இதழ் ஒன்றில் கமல்ஹாசன் ‘என்னுள் மையம் கொண்ட புயல்' என்ற தலைப்பில் தொடர் எழுதி வருகிறார். அதில் இந்து தீவிரவாதம் இல்லை என இந்துக்களே கூற முடியாது என கமல் கூறியுள்ளார். இதற்கு பாஜகவினர் கமலை விமர்சித்து வருகின்றனர்.
 
கமலின் இந்த கருத்துக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார். இவர்களை தொடர்ந்து நடிகர் அரவிந்த் சாமியும் டுவிட்டர் பக்கத்தில் தீவிரவாதம் குறித்து பதிவிட்டுள்ளார். அரவிந்த அவ்வப்போது மத்திய அரசையும், மாநில அரசையும் விமர்த்து டுவிட்டரில் பதிவிடுவது உண்டு. 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :