எனக்கு இப்படிப்பட்ட கணவர் தான் வேண்டும்.... அடம்பிடிக்கும் அஞ்சலி!
தமிழ் சினிமாவின் வித்யாசமான கதைகளை தேர்தெடுத்து நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த நடிகை அஞ்சலியின் திரைப்பயணத்தில் கற்றது தமிழ், அங்காடி தெரு, கலகலப்பு, எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட படங்கள் மைல் கல்லாக அமைந்தது.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு , மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட அனைத்து தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இதற்க்கிடையில் எங்கேயும் எப்போதும் படத்தில் தன்னுடன் நடித்த நடிகர் ஜெய் காதலித்து இருவரும் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருவதாக கிசு கிசுக்கள் எழுந்தது. பின்னர் சில காலம் படங்களில் நடக்காமல் இருந்து வந்த அஞ்சலி மீண்டும் பேரன்பு, லிசா ,நாடோடிகள் 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
ஆனால் தற்போது சரியான படவாய்ப்புகள் இல்லாமல் விட்ட இடத்தை தேடி பிடித்துக்கொண்டிருக்கிறார். அதோடு ஜெய்யுடனான அவரது காதல் முறித்துக்கொண்டார். தற்போது ஓரளவுக்கு மார்க்கெட் பிடித்துவிட்டார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் என்னை பொறுத்தவரை நல்ல பையன் என்பவர் திருமணமான பிறகும் மரியாதை கொடுக்க வேண்டும். இதையடுத்து தான் அன்பு, காதல் எல்லாம். இது போன்று இருக்கும் பையனை தான் எனக்கு பிடிக்கும். அப்படிப்பட்டவரை தான் திருமணம் செய்வேன் என்று கூறியுள்ளார்.