வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: திங்கள், 16 ஏப்ரல் 2018 (11:38 IST)

தனக்கென தனி இணையதளம் தொடங்கிய கீர்த்தி சுரேஷ்

தனக்கென தனி இணையதளம் ஒன்றைத் தொடங்கியுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

 
மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, பின்னர் ஹீரோயினாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். ‘கீதாஞ்சலி’ படத்தின் மூலம் மலையாளத்தில் ஹீரோயினாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ், ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
 
விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விக்ரம், விஷால் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். குறிப்பாக, ‘பைரவா’ படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்த கீர்த்தி சுரேஷ், தற்போது ‘தளபதி 62’ படத்திலும் விஜய்யுடன் நடித்து வருகிறார்.
 
இந்நிலையில், தனக்கென தனி இணையதளம் ஒன்றைத் தொடங்கியுள்ளார் கீர்த்தி சுரேஷ். https://www.keerthysuresh4us.com/ என்ற இந்த இணையதளத்தில், கீர்த்தி சுரேஷைப் பற்றிய படங்களைப் பற்றிய அனைத்துத் தகவல்களும் இடம்பெற்றுள்ளன.