1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 6 ஏப்ரல் 2018 (17:08 IST)

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் இணையதளம் முடக்கம். சீனா காரணமா?

கடந்த சில ஆண்டுகளாகவே ஹெக்கர்களின் அட்டகாசம் உலகம் முழுவதும் அதிகமாகி வருகிறது. தனியார்களிடம் தங்களுடைய வேலையை காட்டி வந்த இந்த ஹேக்கர்கள் சமீபகாலமாக அரசு இணையதளங்களிலும் புகுந்து தங்கள் கைவரிசையை காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் சற்றுமுன்னர் இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வந்துள்ளது. இந்த இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள் அந்த இணையதளத்தின் ஹோம் பக்கத்தில் சீன எழுத்துக்களை பதிவு செய்துள்ளனர். இதனால் இந்த இணையதள முடக்கத்திற்கு சீனாவில் உள்ள ஹேக்கர்கள் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அருணாச்சல பிரதேச விவகாரம் உள்பட இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பல பிரச்சனைகள் இருந்து வரும் நிலையில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் இணையதளம் சீனாவால் முடக்கப்பட்டதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து சைபர்கிரைம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாதுகாப்புத்துறையின் இணையதளமே ஹேக்கர்களின் கையில் சிக்கியுள்ள நிலையில் ஆதார் விபரங்கள் மட்டும் எப்படி பாதுகாப்பாக இருக்கும்? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.