98 வயதில் கொரோனாவை வென்ற கமல் பட நடிகர்!
நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி 98 வயதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் குணமாகியுள்ளார்.
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் மற்றும் பம்மல் கே சம்மந்தம் ஆகிய படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி. இது தவிர ஏராளமான மலையாளப் படங்களில் அவர் நடித்துள்ளார். இவருக்கு தற்போது வயது 98.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் அவர் நிமோனியா காய்ச்சலாலும், கொரோனாவாலும் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் அவர் இப்போது பரிபூரண குணமடைந்துள்ளார்.