செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 18 ஜனவரி 2021 (09:32 IST)

பாரதிராஜாவின் பட பார்ட் 2 வை எடுக்க ஆசைப்படும் கார்த்திக் நரேன் – எந்த படம் தெரியுமா?

இயக்குனர் பாரதிராஜா இயக்கி கல்ட் கிளாசிக்காகக் கொண்டாடப்படும் சிவப்பு ரோஜாக்கள் படத்தின் பார்ட் 2 வை எடுக்கும் ஆசை உள்ளதாக இயக்குனர் கார்த்திக் நரேன் தெரிவித்துள்ளார்.

துருவங்கள் பதினாறு மூலமாக அறிமுகமான கார்த்திக் நரேன், அடுத்து இயக்கிய நரகாசூரன் திரைப்படம் இன்னும் வெளியாகவே இல்லை. ஆனால் அவர் இயக்கி மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான மாஃபியா திரைப்படம் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து அவர் இப்போது தனுஷ் நடிக்கும் D43 படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இவருக்கு பாரதிராஜா இயக்கத்தில் கமல், ஸ்ரீதேவி நடிப்பில் 1979 ஆம் ஆண்டு வெளியான சிவப்பு ரோஜாக்கள் படத்தின் பார்ட் 2 வை எடுக்க ஆசை உள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா ஏற்கனவே அதற்கான முயற்சியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.