1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வெள்ளி, 8 ஜூன் 2018 (17:39 IST)

கார்த்திக் ராஜு இயக்கத்தில் சனந்த் ரெட்டி

கார்த்திக் ராஜு இயக்கவுள்ள புதிய படத்தில், சனந்த் ரெட்டி ஹீரோவாக நடிக்கிறார்.

 
‘திருடன் போலீஸ்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் ராஜு. தினேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பால சரவணன் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்தனர். இதைத்தொடர்ந்து மறுபடியும் தினேஷை வைத்து ‘உள்குத்து’ படத்தை இயக்கினார் கார்த்திக் ராஜு. கடந்த வருடம் ரிலீஸான இந்தப் படம், விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது.
 
இந்நிலையில், சனந்த் ரெட்டியை ஹீரோவாக வைத்து அடுத்த படத்தை இயக்க இருக்கிறார் கார்த்திக் ராஜு. வர்மா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். பிரவீன் கே.எல். எடிட்டராகப் பணியாற்றுகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகும் இந்தப் படம், சூப்பர் நேச்சுரல் எண்டெர்டெயினராக உருவாக இருக்கிறது.