Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

உள்குத்து - திரை விமர்சனம்

ulkuthu
C.M.| Last Updated: வெள்ளி, 29 டிசம்பர் 2017 (13:35 IST)
வழக்கமான பழிவாங்கல் கதையை, வித்தியாசமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் ராஜு.கார்த்திக் ராஜு இயக்கத்தில் தினேஷ், நந்திதா ஸ்வேதா ஜோடியாக நடித்துள்ள படம் ‘உள்குத்து’. பால சரவணன் முக்கிய வேடத்தில் நடிக்க, திலீப் சுப்புராயன் மற்றும் சரத் லோகிதாஸ்வா இருவரும் வில்லன்களாக நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். பால சரவணன் வசிக்கும் குப்பத்துக்கு, யாருமில்லையென்று சொல்லி வந்து அடைக்கலம் கேட்கிறார் தினேஷ். அவரை படித்தவர் என்று நம்பும் பால சரவணன், தன் வீட்டில் அடைக்கலம் கொடுக்கிறார். தினேஷுக்கும், நந்திதாவுக்கும் இடையில் காதல் மலர்கிறது.

வில்லனின் ஆள் ஒருவனை தினேஷ் அடிக்கப்போக, தினேஷைப் போட்டுத்தள்ள ஆட்களுடன் வருகிறார் திலீப் சுப்புராயன். அவரையும் தினேஷ் அடித்து துவைக்க, திலீப் சுப்புராயனின் தந்தையான சரத் லோகிதாஸ்வாவுக்கு கோபம் வருகிறது. எப்படியாவது தினேஷைக் கொன்றுவிடுமாறு அடியாட்களிடம் கூறுகிறார்.

இந்நிலையில், திடீரென படகுப்போட்டியில் திலீப் சுப்புராயனுக்கு விட்டுக்கொடுத்து, வில்லன்கள் இருவரிடமும் நட்பாகிறார் தினேஷ். வில்லன்களை அடித்த தினேஷ் அவர்களிடம் ஏன் நட்பாகிறார் என்பது மீதிக்கதை.

வழக்கம்போல தினேஷ் ஒரே மாதிரியான ரியாக்ஷனில் நடித்தாலும், கவர்கிறார். நந்திதா அழகாக வந்துபோகிறார். படம் முழுக்க வந்து காமெடியாக ரசிக்க வைத்திருக்கிறார் பால சரவணன். வில்லன்கள் இருவரின் நடிப்பும் பிரமாதம். அடுத்து இப்படித்தான் நடக்கும் என நாம் நினைத்திருக்க, நமக்கு ட்விஸ்ட் வைத்து வேறுமாதிரியான திரைக்கதையைக் கொண்டு சென்று விறுவிறுப்பாக்கியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் ராஜு.


இதில் மேலும் படிக்கவும் :