நடிகை விஜய் குறித்த டிவி விவாதம்.. வர மறுத்த நடிகை கஸ்தூரி..
நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கம் குறித்த டிவி விவாதம் நடத்த போவதாகவும் அதற்கு வருகை தர வேண்டும் என பிரபல டிவி ஒன்று அழைப்பு விடுத்த நிலையில் நான் அந்த விவாதத்திற்கு வர முடியாது என நடிகை கஸ்தூரி தெரிவித்து விட்டதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கம் கடந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது என்பதும் அம்பேத்கர் பிறந்த நாள், தீரன் சின்னமலை பிறந்தநாள் ஆகியவற்றுக்கு சிலைகளில் மாலை அணிவித்து விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் மரியாதை செலுத்தி வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.
இதனை அடுத்து விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் இயக்கமாக மாறும் என்று கூறப்படுவதால் ஊடகங்களில் இந்த செய்திகள் தலைப்பு செய்திகளாக இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் பிரபல டிவி ஒன்று இது குறித்து விவாதம் செய்ய நடிகை கஸ்தூரியை அழைத்ததாகவும் ஆனால் அவர் வர முடியாது என்று கூறிவிட்டதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:
இன்று இன்னொரு அழைப்பு - மாலை நாளிதழ் குழுமத்தின் டிவி. விஜய் மக்கள் இயக்கத்தினர் தீரன் சின்னமலை சிலைக்கு மாலையிட்டனர், அதை சாக்காக வைத்து விஜய் பற்றி விவாதிக்கலாம் என்று ... " ஐயையே என்னங்க இது நாட்டுல என்னவெல்லாமோ நடக்கும் போது " என்று என்னையுமறியாமல் சொல்லி விட்டேன். பாவம் அழைத்தவருக்கு என்னவோ போலாகி விட்டது. எந்த டிவி என்று 8 மணிக்கு பாத்து தெரிஞ்சுக்குங்க !
Edited by Siva