வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (15:55 IST)

மீண்டும் சினிமாவுக்கு திரும்பும் அஜித் பட நடிகை…. மேலும் ஒரு ஆச்சர்ய தகவல்!

அஜித் நடிப்பில் உருவான ராஜா படத்தில் அறிமுகமான நடிகை பிரியங்கா திரிவேதி மீண்டும் சினிமாவுக்கு திரும்ப உள்ளார்.

2002 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் உருவான ராஜா என்ற படத்தில் இரு நாயகிகளில் ஒருவராக நடித்தவர் பிரியங்கா திரிவேதி. அதன் பிறகு விக்ரம் நடித்த காதல் சடுகுடு படத்தில் நடித்தார். அந்த இரு படங்களும் சரியாக போகாததால் பின்னர் கன்னடத்தில் சில படங்களில் நடித்தார். அதன் பின்னர் முன்னணி நடிகர் உபேந்திராவை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார். இவர்தான் உபேந்திராவின் மனைவி என்பதே பலருக்கும் தெரியாது.

இந்நிலையில் இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளார். பிக்பாஸ் புகழ் மஹத் மற்றும் யாஷிகா ஆனந்த் நடிக்கும் புதிய படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.