வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By siva
Last Modified: செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (08:11 IST)

பாரதிராஜாவை இழுக்க பாஜக முயற்சியா? பரபரப்பு தகவல்

தமிழகத்தைச் சேர்ந்த திரையுலக பிரபலங்கள் பலர் பாஜகவில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்ட நிலையில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவையும் பாஜகவில் இழுக்க முயற்சி நடந்ததாகவும் ஆனால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது
 
பாரதிராஜாவை பாஜகவில் இணைக்க தமிழகத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் முயற்சி செய்ததாகவும் இதற்காக பாரதிராஜாவின் அலுவலகத்திற்கே அவர் சென்று பேசியதாகவும், ஆனால் அவரிடம் பிடி கொடுக்காமல் நான் எந்த கட்சியிலும் சேராமல் பொதுவாக இருக்கவே விரும்புவதாக அவர் தெரிவித்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது 
 
ஏற்கனவே விஷால் உள்பட பல திரையுலக பிரபலங்களுக்கு வலை வீசி வரும் பாஜகவின் வலையில் சிக்காமல் பாரதிராஜா நழுவி உள்ளதை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. பாரதிராஜா போன்ற கலைஞர்கள் அனைத்து ரசிகர்களுக்கும் பொதுவானவர் என்றும் அவர் எந்த அரசியல் கட்சியிலும் சேராமல் இருப்பதே அவருடைய மரியாதைக்கு உகந்தது என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பாரதிராஜாவை அடுத்து மேலும் ஒரு பிரபல இயக்குனருக்கு பாஜக வலைவிரித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது