புதன், 4 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (17:17 IST)

தளபதி 63: " தொட கூட முடியாது " கங்கணம் கட்டும் கதிர்!

அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக தளபதி 63 படத்தில் இணைந்துள்ளார் நடிகர் விஜய். இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிகர் யோகி பாபு, விவேக் ஆகியோரும், வில்லன் கதாபாத்திரத்தில் ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி ஆகியோரும் நடிக்கின்றனர்.


 
இப்படத்தில் விஜய் ஒரு கால்பந்து விளையாட்டின் பயிற்சியாளராக நடிப்பதாகவும் தகவல்கள் வெளிவர நேற்று விஜய் கதாபத்திரத்தின் பெயர் சி.மைக்கேல் என்று தகவல் கிடைத்தது. 
 
இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் , இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் நடிகர் கதிர் அண்மையில் பிரபல இணையதள தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்திருந்தார். அதில் அவர் கூறியதாவது, 
 
தளபதி 63 படம் பக்கா மாஸாக இருக்கும் , தளபதி ரசிகர்கள் விஜய் மீது வைத்திருக்கும் அந்த அன்பை யாராலும் தொட கூட முடியாது என்று கூறியுள்ளார். மேலும் தளபதி ரசிகர்கள் எல்லாம் வேற லெவல் என்று தெரிவித்தார். சமூக ஊடக வாசிகள் தளபதியின் தம்பி என்று நெகிழ்ச்சியாக நடிகர் கதிர் பேசியத்தை கேட்ட விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.


 
நடிகர் கதிர் தளபதி விஜய்யின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.