வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 18 ஜூலை 2023 (07:59 IST)

எதிர்நீச்சல் தவிர பிற சீரியல்களில் நடிக்காதது ஏன்?.. மாரிமுத்து பதில்!

சன் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் படு பயங்கரமான ஹிட் அடித்துள்ளது. தொலைக்காட்சிக்கு வெளியேயும் இந்த சீரியல் ரசிகர்களைக் கவர்ந்து முகநூல், இன்ஸ்டாகிராமில் எல்லாம் துணுக்குகள் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

சமீபத்திக் இந்த சீரியல் டி ஆர் பி ரேட்டிங்கில் உச்சம் தொட்டது. சமீபத்தில் இந்த சீரியல் 9.3 என்ற புள்ளியை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர் சீரியல் குழுவினர். இந்நிலையில் இப்போது இந்த சீரியல் 400 ஆவது எபிசோட்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியல் தமிழில் அடைந்த வெற்றியை அடுத்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி மற்றும் மராத்தி என ஐந்து மொழிகளில் டப் ஆகி ஓடிக் கொண்டிருக்கிறதாம்.

இந்த சீரியலில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் மாரிமுத்து பிற சீரியல்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் அவற்றை மறுத்துவருகிறார். இதுபற்றி பதிலளித்த அவர் “இந்த சீரியலின் கதாபாத்திரம் பிடித்ததால்தான் நடிக்க ஒப்புக்கொண்டேன். இது தவிர படங்களிலும் நடிக்கிறேன். இந்த சீரியலே 1500 எபிசோட்கள் போகும் என இயக்குனர் கூறியுள்ளார். அதனால் மற்ற சீரியல்களில் நான் நடிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது” எனக் கூறியுள்ளார்.