Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அஞ்சலிக்கு என்னை பிடித்திருக்கிறது - நடிகர் ஜெய் பேட்டி

வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (12:35 IST)

Widgets Magazine

ஜெய், அஞ்சலி நெருக்கம் குறித்து ஏற்கனவே பல வதந்திகள். இப்போது ஜெய் அஞ்சலிக்கு தோசை கூட்டுக் கொடுத்த  புகைப்படம் வெளியாகி இவர்கள் நட்பு நட்பையும் தாண்டியது என்று பேச வைத்துள்ளது. இது குறித்து ஜெய் திறந்த மனதுடன் பேசியிருப்பது ஆச்சரியம்.

 
நீங்களும், அஞ்சலியும் நெருங்கிப் பழகுவதாக கூறப்படுகிறதே?
 
நானும், அஞ்சலியும் நெருங்கி பழகுவது உண்மைதான். எங்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பும், புரிதலும் இருந்து  வருகிறது. எங்கேயும் எப்போதும் படப்பிடிப்பின்போதே இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டோம். எனக்கு அஞ்சலியை  பிடித்து இருக்கிறது. அஞ்சலிக்கு என்னை பிடித்து இருக்கிறது.
 
அஞ்சலியிடம் உங்களை கவர்ந்தது?
 
அஞ்சலி மிக மென்மையானவர். எங்கேயும் எப்போதும் படத்தில் அவர் என்னை அடிக்கடி அடித்துக்கொண்டே இருப்பார். நிஜ  வாழ்க்கையில் அவர் அதற்கு நேர்மாறான சுபாவம் கொண்டவர். அந்த மென்மையான சுபாவம்தான் என்னை கவர்ந்தது.
 
உங்களிடம் அஞ்சலிக்குப் பிடித்தது?
 
அவர் எப்போதாவது வருத்தமாகவோ கோபமாகவோ இருந்தால், தமாஷ் செய்து அவரை நான் சிரிக்க வைத்து விடுவேன்.  அஞ்சலிக்கு என்னிடம் பிடித்ததே இதுதான்.
 
இந்த நட்பு உங்கள் வீட்டுக்கு தெரியுமா?
 
நாங்கள் நல்ல நண்பர்கள் ஆனபின் அஞ்சலி எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து போய்க் கொண்டிருக்கிறார். அஞ்சலியின் குணம்  எங்க அப்பாவுக்கு பிடித்து இருக்கிறது. அஞ்சலிக்கு நன்றாக சமைக்க வரும். ஐதராபாத் நெய் சோறும், சிக்கன் மசாலாவும்  அவருடைய ஸ்பெஷல். அப்பாவுக்கு ருசியாக சமைத்து கொடுக்கிறார்.
 
உங்கள் சகோதரிகள் என்ன சொல்கிறார்கள்?
 
எனக்கு மூன்று அக்காள் இருக்கிறார்கள். அவர்களின் நெருங்கிய சினேகிதி ஆகி விட்டார் அஞ்சலி. நாங்கள் இருவரும் நெருங்கி  பழகுவது அக்கா மூன்று பேருக்கும் தெரியும்.
 
காதலர் தினத்தை எப்படி கொண்டாடினீர்கள்?
 
நான் சென்னையிலும், அஞ்சலி ஹைதராபாத்திலும் இருந்ததால் வாழ்த்து மட்டும் சொன்னேன்.
 
உங்கள் திருமணம்...?
 
எங்கள் திருமணம் எப்போது என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. என்னை விட வயதில் மூத்தவர்களான சிம்பு, ஆர்யா  விஷால் மூன்று பேரும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர்கள் மூன்று பேருக்கும் திருமணம் முடிவானதும்  எங்கள் திருமணம் நிச்சயிக்கப்படும்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஜீ.வி.பிரகாஷ் படத்திலிருந்து விலகிய இயக்குனர் ராம்பாலா

தில்லுக்கு துட்டு படத்தை இயக்கிய ராம்பாலா அடுத்து ஜீ.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தை ...

news

ரஜினி படத்தை மறுத்த கே.வி.ஆனந்த்

ரஜினி நடிக்கும் படத்தை இயக்க வேண்டும் என்பதே கமர்ஷியில் சினிமா இயக்குனர்களின் அதிகபட்ச ...

news

அஜித்துடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசிக்கின்றேன். விவேக் ஓபராய்

அஜித் நடித்து வரும் 57வது படமான 'விவேகம்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மிக விரைவில் ...

news

ரிலீசுக்கு முன்பே தமிழ் ராக்கரில் வெளிவந்த தமிழ்ப்படம். நடிகர் வேதனை

புதுமுகங்கள் இணைந்து உருவாக்கிய படம் 'லைட்மேன்'. இளைஞர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க ...

Widgets Magazine Widgets Magazine