1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 29 பிப்ரவரி 2024 (20:51 IST)

நடிகர் தனுஷின் சம்பளம் உயர்வு! இத்தனை கோடியா?

நடிகர் தனுஷின் சம்பளம் ரூ.50 கோடியாக  உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

இசைஞானி இளையராஜாவின் பயோபிக் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். இப்படத்தில் இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளார். இப்படத்திற்காக இளையராஜாவுடன் அவர் இரண்டு மாதம் பயணம் மேற்கொண்டு அவரது அனுபவங்களையும் பழைய தகவல்களையும்  சேகரித்து வருகிறார்.

இந்த நிலையில், இப்படத்தின் கூடுதல் தகவலாக இப்படத்தில் இளையராஜாவாக நடிக்கிற  நடிகர் தனுஷுக்கு சம்பளமாக ரூ.50 கோடி பெற்றுள்ளார்  என தகவல் வெளியாகிறது.
 
இப்படத்தை இளையராஜாவே தயாரிக்கிறார் என முதலில் தகவல் வெளியான நிலையில், இப்படத்தை மும்பையை சேர்ந்த ஒரு பிரபல நிறுவனம் முதலீடு செய்து தயாரிப்பதாகவும், இளையராஜா இது தன்னுடைய பயோபிக் படம் என்பதால் இதற்கு ரால்டியாக குறிப்பிட்ட பணம் எதுவும் வாங்காமல், இப்படத்தில் இருந்து பிராஃபிட் சேர் வாங்க திட்டமிட்டுள்ளார் என தகவல் வெளியாகிறது.