செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 16 ஜூன் 2020 (12:53 IST)

அப்பாவிற்கு ஷேவிங் செய்து காசு வாங்கும் பிரபல நடிகர் - சிரிப்பூட்டும் வீடியோ

மிருகம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் ஆதி. தொடர்ந்து ஈரம், அரவான், ஆடுபுலி, அய்யனார் , மரகத நாணயம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து புகழ்பெறுள்ளார். தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு சினிமாக்களிலும் கவனம் பெற்றுள்ளார்.

இந்நிலையில் கொரோனா லாக்டவுனில் வீட்டில் பாதுகாப்பாக இருந்து வரும் நடிகர் ஆதி தற்போது தனது தந்தைக்கு ஷேவிங் செய்துள்ள வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் ஷேவிங் செய்துவிட்டு அப்பாவிடம் இருந்து பணம் வாங்குக்குகிறார்.

அப்பா குறைவான பணத்தை கொடுப்பதால் பேரம் பேசிக்கொண்டே பர்ஸை வாங்கி பணத்தை எடுத்துக்கொள்கிறார். இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் ஆதி Let's the Bridge என்ற அமைப்பின் மூலம் இணைந்து சென்னை முழுக்க ரவுண்டு அடித்து கொரோனா  நிவாரண உதவி செய்தது குறிப்பிடத்தக்கது.