Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

எதிர்பாராத விபத்தில் சிக்கிய ஒல்லி நடிகர்

Cauveri Manickam| Last Updated: செவ்வாய், 18 ஏப்ரல் 2017 (16:42 IST)
நடிப்பதில் இஷ்டம் இல்லாத ஒல்லி நடிகர், நடிக்க வந்தது ஒரு விபத்து என்று குறிப்பிட்டுள்ளார். இயக்குநர் ஆவதே என் கனவு என்று ஒல்லி நடிகர் கூறியுள்ளார்.
 


 
இயக்குநராக அவதாரமெடுத்திருக்கும் ஒல்லி நடிகரின் படத்துக்கு, எல்லாத் தரப்பில் இருந்தும் அமோக வரவேற்பு. படத்தை தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ரீமேக் செய்வதற்கு பேசி வருகிறார்களாம். இதனால், மனம் கொள்ளாத மகிழ்ச்சியில் இருக்கிறார் ஒல்லி நடிகர்.
 
உண்மையை சொல்லப்போனால், நடிப்பதில் ஒல்லி நடிகருக்கு இஷ்டமே இல்லையாம். அவர் கனவெல்லாம் படம் இயக்குவதில்தானாம். ஆனால், இயக்குநரான அண்ணனின் வற்புறுத்தலுக்காகத்தான் நடிக்க ஒத்துக் கொண்டாராம். அதை விபத்து என்று குறிப்பிடும் ஒல்லி நடிகர், இயக்கம் அப்படிப்பட்டது அல்ல என்றும் கூறியுள்ளார்.
 
2006ஆம் ஆண்டில் இருந்தே படம் இயக்குவதுதான் அவர் கனவாம். 11 வருடங்களுக்குப் பிறகு அவர் கனவு நனவாகியுள்ளது. இதற்காக ஏகப்பட்ட கஷ்டங்களையும் சந்தித்துள்ளாராம் ஒல்லி நடிகர். பல குறும்படங்களை இயக்கி ட்ரையல் பார்த்துள்ளார். தற்போது எல்லாவற்றிற்கும் கைமேல் பலன் கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கிறார் ஒல்லி நடிகர்.


இதில் மேலும் படிக்கவும் :