வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: செவ்வாய், 18 செப்டம்பர் 2018 (15:31 IST)

சிவகார்த்திகேயனுக்கு ஏ.ஆர்.ரகுமான் அளித்த ஸ்பெஷல் கிப்ட்!...

சிவகாரத்திகேயன், சமந்தாடன்  ஜோடியாக நடித்த சீமராஜா கடந்த 13ம் தேதி வெளியானது. இந்த படம் ஹீரோவாக சிவகார்த்திகேயனுக்கு நல்ல ஓபனிக்கை அளித்தது.  24 ஏஎம் ஸ்டுடியோ சார்பாக ஆர்.டி. ராஜா இந்த படத்தை தயாரித்து இருந்தார். 

 
இதனிடையே சிவகார்த்திகேயனின் மற்றொரு படத்தை யும் ஆர்டி ராஜா தயாரிக்கிறார். இந்த படத்தை இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்க உள்ளார். அறிவியல் தொழில்நுட்பங்கள் நிறைந்த த்ரில்லர் படமாக உருவாகும் இதில்  சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்.  இதில் இவர்களுடன் யோகிபாபு, கோதண்டம், மொட்டை ராஜேந்திரன், பானுப்பிரியா மற்றும் இஷா கோபிகர் ஆகியோர் நடிக்கின்றனர்.
 
இந்நிலையில் சிவகார்த்திகேயனின் இந்த புதிய படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ஒப்பந்தமாகி உள்ளார். சிவகார்த்திகேயனின் கோரிக்கையை ஏற்று ஆஸ்கர் நாயகன், புதிய படத்துக்கு இசையமைக்க முடிவு செய்துள்ளார்.  ஏ.ஆர். ரகுமான் குரலில்  சிவகார்த்திகேயனின்  பாடல்களை ரசிகர்கள் கேட்டு ரசிக்க காத்திருக்கிறார்கள்.