ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 2 மே 2023 (17:13 IST)

ஜெயம் ரவி இயக்கத்தில் பிரபல நடிகர் ஹீரோவாக நடிக்கும் புதிய படம்!

என் இயக்கத்தில் கார்த்தி ஒரு படத்தில் நடிப்பார் என்று நடிகர் ஜெயம் ரவி கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ஜெயம்ரவி. இவர், ஜெயம், சம்திங் சம்திங். மழை, பேராண்மை, எம்குமரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபதிதில் அவரது நடிப்பில், அகிலன் ரிலீஸானது. இதையடுத்து, மணிரத்னம் இயக்கத்தில், கார்த்தி, பிரபு, ஐஸ்வர்யா ராய் ,சரத்குமார், ஆகியோருடன் இணைந்து நடித்த பொன்னியின் செல்வன் 2 படம் ரிலீஸானது.

இதில், ராஜராஜ சோழனாக, பொன்னியின் செல்வனாக நடித்திருந்த ஜெயம்ரவிக்கு பலரும் பாராட்டுகள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், பொ.செ  சூட்டிங்கின்போது, நடிகர் ஜெயம்ரவி, மணிரத்னதிதிட்ம் ஒன்லைன் கதை கூறியுள்ளார். அதைக்கேட்ட அவர் நீ தாராளமாகக் கதை எழுதலாம் என்று கூறியுள்ளார்.

அதன்பின்னர், சில கதைகள் எழுதிய ஜெயம்ரவி,  நடிகர் கார்த்தியிடம் ஒரு கதை கூறியுள்ளார்.

அதன்படி, ஜெயம்ரவி இயக்குனராகவும், கார்த்தி ஹீரோவாக நடிக்கவுள்ள படம் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.