புதன், 18 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 2 மே 2023 (10:17 IST)

வித்தியாசமான முறையில் படமாக்கப்படும் ஜிகர்தண்டா 2 ஆக்‌ஷன் காட்சிகள்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனம் ஆகியோர் நடிப்பில் 2014ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன் நல்ல விமர்சனத்தையும் பெற்றது. இந்த படத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்திய பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருதும் கிடைத்தது. இதையடுத்து 8 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் இதன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. ஆனால் முந்தைய படத்துக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்று கார்த்திக் சுப்பராஜ் கூறியுள்ளார்.

இதன் ஷூட்டிங் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய நிலையில் 36 நாட்களில் பெரும்பகுதி ஷூட்டிங்கை நடத்தி முடித்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ். ஊட்டிக்கு அருகே கிராமத்தில் சுமார் 100 குதிரைகள் மற்றும் 1000 ஜூனியர் நடிகர்களுடன் படப்பிடிப்பு பிரம்மாண்டமாக நடத்தினார்.

இப்போது ஒரு முக்கியமான ஆக்‌ஷன் காட்சியை லாரன்ஸ் உள்ளிட்ட நடிகர்களை வைத்து படமாக்கி வருகிறார் கார்த்திக் சுப்பராஜ். இந்த ஆக்‌ஷன் காட்சியை 6 கேமராக்கள் வைத்து படமாக்கி வருகிறாராம் ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு. படத்தில் இந்த ஆக்‌ஷன் காட்சி பேசப்படும் ஒன்றாக அமையும் என படக்குழுவினர் சார்பில் சொல்லப்படுகிறது.