செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : செவ்வாய், 6 பிப்ரவரி 2018 (20:37 IST)

‘மாரி 2’ படத்தில் இணைந்த முக்கிய நபர்

‘மாரி 2’ படத்தில் குழந்தை நட்சத்திரமான மாஸ்டர் ராகவ் இணைந்துள்ளார்.
தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘மாரி 2. பாலாஜி மோகன் இயக்கிவரும் இந்தப் படத்தில், சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார். கிருஷ்ணா, டோவினோ தாமஸ், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில், ‘சேதுபதி’ படத்தில் சின்ன வயது விஜய் சேதுபதியாக நடித்த மாஸ்டர் ராகவ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர் ஏற்கெனவே தனுஷ் இயக்கிய ‘பவர் பாண்டி’ படத்தில் ராஜ்கிரண் பேரனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.