ஜெய்க்காக சூர்யா செய்யும் உதவி

CM| Last Updated: திங்கள், 5 பிப்ரவரி 2018 (22:19 IST)
ஜெய் நடித்துவரும் ‘ஜருகண்டி’ படத்தின் டீஸரை இன்று மாலை வெளியிடுகிறார் சூர்யா.
ஜெய் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘ஜருகண்டி’. வெங்கட்பிரபுவிடம் உதவி இயக்குநராக இருந்த பிச்சுமணி இந்தப் படத்தை இயக்கி வருகிறார். ஜெய்  ஜோடியாக ரெபா மோனிகா ஜான் நடிக்கிறார். மேலும், ரோபோ சங்கர், இளவரசு, டேனியல், மைம் கோபி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
 
இந்தப் படத்தை, நடிகர் நிதின் சத்யா தயாரிக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக்கை, இயக்குநர் முருகதாஸ் நேற்று வெளியிட்டார். இந்தப் படத்தின் டீஸரை, இன்று  மாலை 5 மணிக்கு சூர்யா வெளியிடுகிறார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :