1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 18 டிசம்பர் 2024 (07:26 IST)

அல்லு அர்ஜுன் கைதுக்குக் காரணமான கடிதம்… ஜாமீனை ரத்து செய்ய மேல்முறையீடா?

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் இந்த படத்தை பார்க்க பெண் ஒருவர் தனது மகனுடன் சென்றிருந்த நிலையில், அல்லு அர்ஜுன் அங்கு வந்ததால் கூட்ட நெரிசல் அதிகமானது. இதில் சிக்கி அந்த பெண் உயிரிழந்தார்.

இதையடுத்து சம்மந்தப்பட்ட தியேட்டர் மீதும் அல்லு அர்ஜுன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அல்லு அர்ஜுன் நேற்று கைது செய்யப்பட்டு ஒரே நாளில் இடைக்கால ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். அல்லு அர்ஜுனின் கைது ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் சலசலப்பை உருவாக்கியுள்ளது. இதன் பின்னணியில் அரசியல் காரணங்கள் உள்ளதாகவும் கருத்துகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் அல்லு அர்ஜுன் கைதுக்கு சம்மந்தப்பட்ட சந்தியா திரையரங்கம் கொடுத்த ஒரு கடிதம் முக்கியக் காரணமாக அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. சந்தியா திரையரங்கம் சார்பாக அல்லு அர்ஜுன் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு அளிக்க சொல்லி காவல்துறைக்குக் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த தியேட்டர் அமைந்துள்ள இடம் குறுகலானது என்பதால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாது எனக் கூறி அல்லு அர்ஜுன் வருகையை ரத்து செய்ய சொல்லி காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

ஆனாலும் அதைக் கேட்காமல் அல்லு அர்ஜுன் வந்ததால்தான் உயிரிழப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது என்று காவல்துறை சார்பில் வாதம் வைக்கப்படவுள்ளதாம். இதையடுத்து அல்லு அர்ஜுனுக்கு வழங்கிய இடைக்கால பிணையை ரத்து செய்ய சொல்லி மேல் முறையீடும் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.