வியாழன், 16 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 16 டிசம்பர் 2024 (09:24 IST)

சிறுவன் ஸ்ரீதேஜ் உடல்நிலை குறித்து கவலை… வழக்கு நடப்பதால் சந்திக்க முடியவில்லை – அல்லு அர்ஜுன் வருத்தம்!

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் இந்த படத்தை பார்க்க பெண் ஒருவர் தனது மகனுடன் சென்றிருந்த நிலையில், அல்லு அர்ஜுன் அங்கு வந்ததால் கூட்ட நெரிசல் அதிகமானது. இதில் சிக்கி அந்த பெண் உயிரிழந்தார்.

இதையடுத்து சம்மந்தப்பட்ட தியேட்டர் மீதும் அல்லு அர்ஜுன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அல்லு அர்ஜுன் நேற்று கைது செய்யப்பட்டு இன்று இடைக்கால ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். அல்லு அர்ஜுனின் கைது ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி மருத்துமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவன் ஸ்ரீதேஜ் குறித்து அல்லு அர்ஜுன் தன்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துள்ளார். அதில் “சிறுவன் ஸ்ரீதேஜாவின் உடல்நிலை குறித்து ஆழ்ந்த வருத்தத்துடன் இருக்கிறேன். சட்ட நடவடிக்கைகள் காரணமாக அவரது குடும்பத்தினரை சந்திக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளேன். அவரது மருத்துவ சிகிச்சை மற்றும் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள உறுதியாக இருக்கிறேன். அவர் விரைவில் குணமடையவும், அவர்களின் குடும்பத்தை விரைவில் சந்திக்கவும் ஆர்வமாக உள்ளேன்” எனக் கூறியுள்ளார்.