ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 29 டிசம்பர் 2022 (15:09 IST)

''நிறைய வெடிவாங்கி வையுங்கள்'' துணிவு பட டிரெயிலரை பார்த்த பிரபலம் டுவீட்!

Thuvivu
அஜித்  நடிப்பில் உருவாகியுள்ள படத்தின் டிரைலரை  பார்த்து பிரபல ஒருவர் டிவீட் பதிவிட்டுள்ளார்.

போனி கபூர்- ஹெச்.வினோத்-  நடிகர் அஜித்குமார் கூட்டணியில் 3 வதாக உருவாகியுள்ள படம் துணிவு.

நடிகர் அஜித்துடன் இணைந்து  மஞ்சு வாரியர் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் சில்லா சில்லா, காசேதான் கடவுளடா ஆகிய இரண்டு சிங்கில்களை தொடர்ந்து இப்படத்தின் 3 வது சிங்கில் கேங்ஸ்டர் பாடல் சமீபத்தில் வெளியாகி  டிரெண்டிங்கில் உள்ளது.

வரும் டிசம்பர் 31 ஆம் தேதி துணிவு பட டிரெயிலர் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது.
இந்த டிரெயிலரை    துபாயில் உள்ள புஜ் கபீபா என்ற உயர்ந்த கட்டிடத்திலும், நியூயார், டைம்ஸ் கொயரிலும் திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில்,  துணிவு படத்தின் டிரெயிலரை பார்த்த இப்படத்தின் ஒளிப்பதிவாளர் நிரவ்ஷா, தன் டிவிட்டர் பக்கத்தில், இப்போது தான் ஒரு படத்தின் டிரைலரை பார்த்தேன். வெடிகளை அதிகம் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். நிறைய வாங்குங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

இது ரசிகர்கள் இடையே வைரலாகி வருகிறது. இது நிரவ் ஷாவின் பெயரில் உள்ள கணக்கு ஆனால், இது அவரது அதிகாரப்பூர்வ கணக்கா என தெரியவில்லை.