1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : புதன், 16 ஜூன் 2021 (15:57 IST)

வன்முறையை தூண்டும் வகையில் பேச்சு: பிரபல நடிகர் மீது வழக்கு!

பிரபல நடிகர் ஒருவர் வன்முறையை தூண்டும் வகையில் பேசி உள்ளதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
பழம்பெரும் பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி. இவர் மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின்போது பாஜக நட்சத்திர பேச்சாளர்களில் ஒருவராக இருந்தார். தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாகவும், தேர்தலுக்கு பிந்தைய வன்முறைகளுக்கு அவரது பேச்சு ஒரு காரணமாக இருந்ததாகவும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
 
இந்த நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கொல்கத்தா நீதிமன்றத்தில் மிதுன் சக்கரவர்த்தி மனுதாக்கல் செய்துள்ளார்.  இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பாஜக ஆதரவாளர் என்பதும், பாஜகவுக்காக அவர் மேற்குவங்கம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரச்சாரம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.