திங்கள், 3 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 28 மே 2021 (12:01 IST)

இஸ்ரேல் - காசா வன்முறை பற்றி ஐ.நா. மனித உரிமை கவுன்சில் விசாரிக்கும்

இஸ்ரேல் - காசா இடையே சமீபத்தில் நடந்த மோதலில் நிகழ்ந்த வன்முறை குறித்து புலன் விசாரணை நடத்த ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

 
இஸ்லாமிய நாடுகள் குழு ஒன்று கொண்டுவந்த இந்த தீர்மானம் 24 வாக்குகள் வேறுபாட்டில் வெற்றி பெற்றது. ஆனால், இந்தப் பகுதியில் அமைதியைக் கொண்டுவருவதற்கான முயற்சி முன்னேற்றமடைவதற்கு இந்த தீர்மானம் அச்சுறுத்தலாக இருக்கும் என்று அமெரிக்கா கருத்துத் தெரிவித்துள்ளது.
 
11 நாள்கள் நடந்த இந்த மோதலில் பாலத்தீனர்கள் வாழும் காசாவில் 242 பேரும், இஸ்ரேலில் 13 பேரும் கொல்லப்பட்டனர். கடந்த வெள்ளிக்கிழமை எகிப்து எடுத்த முன்முயற்சியால் இந்த மோதல் முடிவுக்கு வந்தது.