வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 24 ஏப்ரல் 2019 (09:05 IST)

'தளபதி 63' படப்பிடிப்பில் விபத்து! ஒருவர் படுகாயம்

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்களாக விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.
 
பெண்கள் கால்பந்து போட்டி குறித்த படமான இந்த படத்தில் விஜய், கால்பந்து பயிற்சியாளராகவும், அவருக்கு ஜோடியாக நயன்தாராவும், அக்காவாக தேவதர்ஷினியும் நடித்து வருகின்றனர். அதேபோல் கால்பந்து வீராங்கனைகளாக இந்துஜா, ரெபா மோனிகா ஜான், ஆத்மிகா, ரோபோ சங்கரின் மகள், வர்ஷா பொல்லாம்மா ஆகிய ஐந்து நடிகைகளும், ஆறு உண்மையான கால்பந்து வீராங்கனைகளும் நடித்து வருகின்றனார்.
 
இந்த நிலையில் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பில் ஒரு முக்கிய காட்சிக்காக 100 அடிக்கு மேல் வைக்கப்பட்டிருந்த ஃபோக்கஸ் லைட் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. ஃபோக்கஸ் லைட் தவறி விழுந்த இந்த விபத்தில் லைட்டின் கீழே நின்று கொண்டிருந்த மின் பணியாளர் செல்வராஜ் என்பவர் படுகாயம் அடைந்தார். அவர் உடனடியாக அருகில் உள்ள  தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தால் படப்பிடிப்பின் இடையே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.