புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மற‌க்க முடி‌யுமா
Written By
Last Modified: செவ்வாய், 23 ஏப்ரல் 2019 (17:47 IST)

என்னிடமிருந்து தப்பித்த ஒரே நடிகர் விஜய் தான்! புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை!

தன்னிடம் இருந்து தப்பித்த ஒரே நடிகர் விஜய் மட்டும் தான் என்று கூறி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபோட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை லைலா. 


 
கள்ளழகர், முதல்வன், தீனா, தில், காமராசு, உள்ளம் கேட்குமே, நந்தா, பிதாமகன் என தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான அஜித், சூர்யா, விக்ரம் உள்ளிடோருடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் லைலா. தமிழ் மட்டுமின்றி  தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். 
 
பிறகு சினிமா வாய்ப்புகள் கிடைக்காததால் கடந்த 2006-ல் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். மும்பையில் வசித்து வரும் லைலாவுக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள்.
 
இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவலென்னவென்றால், நடிகை லைலா விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, தான் இதுவரை விஜய்யுடன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. என்று கூறி "என்னிடம் இருந்து தப்பித்த ஒரே நடிகர் விஜய் தான்" என்றும் பதிவிட்டுள்ளார். மேலும்  இந்த படத்தின் பெயரை சொல்ல முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
 
அதற்கு லைலாவின்  ரசிகர்கள் பலரும் பதிலளித்து வருகின்றனர். அந்த பதிலில் இது உன்னை நினைத்து படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என்று பலரும் தங்களது பதில் அளித்து வருகின்றனர்.


 
கடந்த 2002-ம் ஆண்டு வெளியான "உன்னை நினைத்து" படத்தில் சூர்யா, லைலா, சினேகா நடித்திருந்தனர். அனால் இந்தப் படத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தமானது நடிகர் விஜய் தான். பிறகு சில காரணங்களால் அவர் அதிலிருந்து விலக சூர்யாவிற்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.