பெண்களுக்கு உரிமை மறுக்கப்படவில்லை, பறிக்கப்படுகிறது :ரஜினி கருத்துக்கு கமல் பதில்
சபரிமலை விஷயத்தில் ரஜினி கூறிய கருத்து பதில் அளித்த கல், பெண்களுக்கான உரிமை மறுக்கப்படுவதாக தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கமலிடம், நடிகர் ரஜினிகாந்த் சம்பிரதாயங்களை மீறக் கூடாது என்று கூறியதற்கு உங்கள் கருத்து என்ன என்று கேட்டனர். அதற்கு கு பதில் அளித்த அவர், இதற்கு என்னிடம் கருத்து கேட்பது அவ்வளவு சரியானது அல்ல.
நான் ஐயப்பன் கோவிலுக்கு போனது இல்லை அதற்கான வாய்ப்பும் அமையவில்லை. நான் நாட்டிற்கும் பெண்களுக்கும் எது நல்லதோ அதைத்தான் நான் கூறுவேன். சபரிமலை விஷயத்தில் பெண்களுக்கான உரிமை மறுக்கப்படவில்லை பறிக்கப்படுகிறது என்றார்.