1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 2 டிசம்பர் 2022 (16:37 IST)

''#30YearsOfVijayism'' வாரிசு பட அடுத்த அப்டேட் பற்றி படக்குழு தகவல் !

varisu
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்தின் அப்டேட் இன்று மாலை வெளியாகும் எனத் தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர்,  நாளைய தீர்ப்பு என்ற படத்தின் சினிமாயவி ஹீரோவாக அறிமுகம் ஆனார்.

இப்படத்தை அவரது தந்தை இயக்கினார். அதன்பின், ரசிகன், விஷ்ணு,கோயம்புத்தூர் மாப்பிள்ளை, குஷி என பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தை அடுத்து, தற்போது, வம்சி இயக்கத்தில், தில் ராஜ் இயக்கத்தில், வாரிசு படத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்துள்ளார்.

இப்படத்தின் முதல் சிங்கில் சமீபத்தில் ரிலீஸாகி வைரலான நிலையில், அடுத்த அப்டேட் எப்போது என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.

இந்த  நிலையில், விஜய் சினிமாவில் அறிமுகமாகி 30 அண்டுகள் ஆகும் நிலையில், இதையொட்டி, இன்று மாலை வாரிசு படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் விஜய்யின் ஜிலிம்ப்ஸ் வீடியோவையும் வெளியிட்டுள்ளது.

Edited by Sinoj