புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 3 நவம்பர் 2018 (11:03 IST)

12 மணிக்கு 2.0 டிரைலர் –சென்னையில் வெளியிடும் படக்குழு

மிக நீண்ட காலதாமதத்திற்குப் பிறகு ஒரு வழியாக நவம்பர் மாதம் 29 ஆம் தேதி வெளியாகிறது ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0.  தற்போது அந்த படத்தின் முன்னோட்டம் இன்று வெளியாக உள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ஐஸ்வர்யா ராய் நடித்து 2010 ஆம் ஆண்டு வெளியாகி பிரம்மாண்டமான வெற்றி பெற்ற எந்திரன் இந்திய சினிமாவின் அறிவியல். தொழில் நுட்ப வளர்ச்சியில் புதிய உச்சம் தொட்டது. இதையடுத்து இதன் இரண்டாம் பாகம் '2.0' எனும் பெயரில் உருவாகி வருகிறது. லைகா 600 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான தொழில்நுட்பம் நிறைந்த படமாக தயாரித்து வருகிறது.

இப்படத்தில் ரஜினிகாந்தோடு பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார், எமி ஜாகஸ்ன் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா 3டி தொழில்நுட்பத்தில் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிராபிக்ஸ் காட்சிகள் முடியாத காரணத்தால் இரண்டு முறை ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டு ஒரு வருட கால தாமதத்திற்குப் பிறகு ஒருவழியாகப் படம் இம்மாதம் 29 ஆம் தேதி ரிலீஸ் ஆவது உறுதியாகியுள்ளது.

ஏற்கனவே பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நிலையில் இன்று இப்படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது. 2டி மற்றும் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாக இருக்கும் இப்படத்தின் டிரைலரைக் காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
இதற்கான விழா தற்போது சென்னையில் உள்ள சங்கம் தியேட்டரில் நடைபெற்று வருகிறது.