1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Updated : செவ்வாய், 13 மே 2014 (17:53 IST)

மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத்...?

ஒரு படம் வெளிவரும்போது அடுத்தப் படத்தை தொடங்கியிருக்க வேண்டும் என்ற சுறுசுறுப்பு பிளானுக்கு அஜீத்தும் மாறியிருக்கிறார். தற்போது கௌதம் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறவர் அது முடிந்ததும் மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கயிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
சிறுத்தை சிவாவிவின் வீரம் சுமாரான வெற்றிதான். அதேநேரம் அஜீத்துக்கு கிராமத்து கதைக்களம் பொருத்தமாக இருக்குமா என்ற சந்தேகத்தை இப்படம் தீர்த்து வைத்தது. அதுவும் அறுபது வயசு வெள்ளை தாடி தலைமுடி கெட்டப்புடன்.
 

வீரம் வெற்றியின் காரணமாக மீண்டும் அஜீத் - சிவா இணையக்கூடும் என பேச்சிருந்தது. அதனை நிரூபிப்பதுபோல் பாஸிடிவான தகவல்கள் வருகின்றன.
சிவா கூறிய கதை அஜீத்துக்கு பிடித்ததாகவும், உடனே அவர் கால்ஷீட் தந்ததாகவும், கௌதம் படம் முடிந்ததும் சிவா - அஜீத் மீண்டும் இணையும் படம் ஆரம்பமாகும் எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.