வியாழன், 16 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 13 ஜனவரி 2022 (16:04 IST)

விஜய் சேதுபதியை ஓரம் கட்டும் பிரபுதேவா… 12 படங்களில் ஒப்பந்தம்!

இயக்குனரும் நடிகருமான பிரபுதேவா தமிழில் இப்போது அதிக படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகிவருகிறார்.

தமிழில் இருந்து பாலிவுட்டுக்கு சென்ற பிரபுதேவா பாலிவுட்டில் பிஸியான இயக்குனராக வலம் வந்து கொண்டிருந்தார். ஆனால் அவர் இயக்கிய சில படங்கள் தோல்வி அடைந்ததால் இப்போது மீண்டும் நடிப்புப் பாதைக்கு திரும்பியுள்ளார். தமிழில் அவர் நடிப்பில் ஐந்துக்கும் மேற்பட்ட படங்கள் உருவாகி ரிலீஸுக்கு தயாராக உள்ளன.

இதையடுத்து தமிழில் அவர் அதிக படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி வருகிறார். அவர் கைவசம் இப்போது 12 படங்கள் உள்ளனவாம். இந்த படங்கள் எல்லாம் அறிமுக மற்றும் வளரும் இயக்குனர்களால் இயக்கப்பட உள்ளதாம். கடந்த சில ஆண்டுகளாக அதிக படங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதியை இந்த ஆண்டு பிரபுதேவா ஓரம் கட்டிவிடுவார் என்று சொல்லப்படுகிறது.