1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 13 ஜனவரி 2022 (15:58 IST)

படக்குழுவினருக்கு கோவிட் தொற்று… விக்ரம் படப்பிடிப்பு நிறுத்தம்!

கமல் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வந்த நிலையில் இப்போது நிறுத்தப்பட்டுள்ளது.

உலகநாயகன் கமலஹாசன் நடித்து தயாரித்து வரும் திரைப்படம் ’விக்ரம்’. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார் என்பதும் அனிருத் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  இந்த படத்தில் கமலோடு விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு இப்போது மீண்டும் சென்னையில் நடந்து வந்தது. அங்கு சண்டைக் காட்சிகளை படமாக்கி வந்தார் லோகேஷ் கனகராஜ். ஆனால் படக்குழுவை சேர்ந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் இப்போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.