புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 9 ஜூன் 2021 (08:01 IST)

மாநாடு படத்தின் இசை உரிமையைக் கைப்பற்றிய நிறுவனம்! விரைவில் பர்ஸ்ட் சிங்கிள்!

மாநாடு படத்தின் ஆடியோ உரிமையை அந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவே கைப்பற்றியுள்ளார்.

சிம்பு நடித்த மாநாடு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் ரம்ஜான் தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இயக்குனர் வெங்கட்பிரபுவின் தாயார் இறந்ததால் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் விரைவில் முதல் பாடல் வெளியாகும் அறிவிப்பு என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு படத்தின் மற்றொரு அப்டேட்டை தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளார்.

அது என்னவென்றால் படத்தின் இசை உரிமையை யுவன் ஷங்கர் ராஜாவின் U1 ரெக்கார்ட்ஸ் நிறுவனமே வாங்கியுள்ளதாம். விரைவில் முதல் பாடல் ரிலீஸ் குறித்து யுவன் அறிவிப்பார் என சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.