திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 14 டிசம்பர் 2022 (13:44 IST)

நான் ஒரு பைத்தியம்... Play Boy - திருமணம் நின்றதற்கான காரணத்தை கூறிய விஷால்!

நடிகர் விஷால் தன் திருமணம் நின்றதற்கான காரணத்தை முதன் முறையாக கூறியிருக்கிறார். 
 
தமிழ் சினிமாவின் ஹிட் ஹீரோக்களில் ஒருவரான நடிகர் விஷால் கடந்த 2019ம் ஆண்டு ஐதராபாத்தைச் சேர்ந்த அனிஷா என்ற பெண்ணை திருமண நிச்சயதார்த்தம் செய்திருந்தார். ஆனால் சத்தமில்லாமல் அந்த திருமணம் நின்று விட்டது. 
 
இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய விஷால், என் வாழ்க்கையிலே 2019ம் ஆண்டு தான் மிகவும் மோசமான வருடம். அந்த சமயத்தில் எனக்கு நானே பேசிக்கொண்டேன். என்னுடன் பழகியவர்கள் கூட நான் பைத்தியம் என கூறி ஒதுங்கிவிட்டார்கள். பின்னர் நாங்கள் இருவரும் பேசி ஒருமனத்தோடு தான் பிரிந்தோம் என கூறினார். 
 
இதனால் என்னை பெண்களை ஏமாட்றும் Play Boy என்றெல்லாம் பேச ஆரம்பித்தார்கள். ஆனால், அந்த பெண்ணுக்கு பிரிய விருப்பமில்லாமல் நான் அந்த திருமணத்தை நிறுத்தவில்லை. நான் அப்படி செய்திருந்தால் தான் ஏமாற்றினேன் என்று அர்த்தம். உண்மையில் இருவரும் பேசி தான் இந்த முடிவுக்கு வந்தோம் என கூறினார்.